Pages

Tuesday, 8 March 2011

தேர்தல் தள்ளிவைப்பு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு


பேரவைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரும் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பள்ளி பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்க கோரி திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அடங்கிய பெஞ்ச் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் வாதாடியதாவது: தேர்வு நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல. வீடுகளில் குழந்தைகள் நீண்ட நேரம் டி.வி. பார்க்கின்றனர். இதை பெற்றோர்கள் தடுப்பது இல்லை. பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டுதான் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலைத் தள்ளிவைப்பதன் மூலம் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும். மற்ற மாநிலங்களுக்கான தேர்தலும் பாதிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்தரவை ஒத்திவைத்தனர்.

1 comment:

Post a Comment