Pages

Tuesday, 5 April 2011

காங்கிரசு வேட்பாளரை துரத்தியடித்த அரியலூர் தொகுதி மக்கள்

அரியலூர் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசு கட்சியின் வேட்பாளருமான பாலை தி.அமரமூர்த்தி மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று முன் தினம் 50-60 தொண்டர்கள், குண்டர்களுடன் கோப்பிலியான் குடிக்காடு என்ற கிராமத்திற்கு சென்றிருக்கிறார் காங்கிரசு வேட்பளர் வருவதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஊர் நெடுக கருப்புகொடியை கட்டி வைத்திருந்தனர் இதை முன்கூட்டியே அறிந்த காங்கிரசு கட்சியின் அந்த பகுதி வட்டசெயலாளார் கருப்பு கொடிகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கினார் அதை கண்ட ஊர் பொதுமக்கள் கருப்புகொடியை மறுபடியும் கட்டும்படி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கடைசியில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இது ஒரு புரமிருக்க இதை எதையும் அறியாத வேட்பாளர் அந்த ஊருக்குள் நுழைய கொதித்து போன மக்கள் கருப்புகொடிகாட்டி, செருப்பு மாலை அநிவித்த கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து அந்த இடத்தை விட்டு வாக்கு கேட்காமலேயே திரும்பினார் அமரமூர்த்தி. அடுத்து சென்ற மன்னுலி, நாகலூர், சாவடிக்காடு, ஆதிங்குடிக்காடு, ஹைர்லாபாத் என்று அனைத்து ஊர்களிலும் இதே போன்று கருப்புகொடி வரவேற்பும், கொடும்பாவி எரிப்புமாக இருக்க அமரமூர்த்தி வாக்கு சேகரிப்பை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டார்.

1 comment:

Namy said...

The atrocity of ciment factory is a big problem in Ariyalur

Post a Comment