Pages

Friday, 1 April 2011

காங்கிரசை அழித்தொழிப்போம்! - காங்கிரசு எதிர்ப்பு முன்னணி சூழுரை


இன்று சரியாக நான்கு மணியலவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தபட்டது அதில் சர்வதேச தமிழர் கழகத்தின் ஒருங்கினைப்பாளர் சோழநாடான் தலைமைத் தாங்கினார் மற்றும் தமிழக இளைஞர் இழுச்சிப் பாசறையின் ஒருங்கினைப்பாளர் சதீஷ், தமிழ்தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் ஆனந்த், சேவ் தமிழ்ஸ் அமைப்பின் பிறதிநிதி ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தமிழகத்தில் இருக்கும் ஏழு சட்டக்கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளும், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் மகேஷ் அவர்களும்  வந்திருந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

2011 சட்டமன்றத் தேர்தலில்,
தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழினத்திற்கும் பொது எதிரியாக விளங்கும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக எங்கள் எதிர்ப்பு முன்னணி முடிவு செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளரான ஞானசேகரனை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கூட்டு இயக்கத்தினது முழு கவனத்தையும் ஒருங்கே செலுத்தி, இந்த முயற்சியில் ஈடுபட உறுதி கொண்டுள்ளோம். 
இந்தியக் காங்கிரசின் தமிழக விரோத செயல்களான:
1. தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரசே முழுப்பொறுப்பு.
2. தமிழர்களின் சொத்தான கச்சத்தீவை தமிழர்களிடம் சம்மதம் பெறாமலேயே இலங்கைக்கு கொடுத்ததன்மூலம் பல உயிர்கள் போக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி.
3. 2 லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆயுத உதவியும், பொருளாதார உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கி தமிழினத்தை வேரறுத்த காங்கிரஸ் கட்சியினை எந்தத் தமிழனும் மன்னிக்கமாட்டார்கள்.
4. தாராளமயம் என்று கூறி, பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து, தமிழ்நாடு முழுவதையும் சுடுகாடாக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி.
5. காசுமீரில் 1லட்சம் மக்களையும் அசாம் வடகிழக்கு மாநிலங்களில் 1லட்சம் மக்களையும கொன்று குவித்தது சமூக விரோத இந்தியக் காங்கிரஸ கட்சி சொந்த மக்களையே கொன்று குவிக்கும் கட்சியாக இந்தியக் காங்கிரஸ் இருந்து வருகிறது.
 காங்கிரஸ் கட்சி இப்படியென்றால் அதன் வேட்பாளர் ஞானசேகரனோ! 
தமிழக மக்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும், சட்ட மன்றத்தில் இதுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. அவர்களைப் பற்றி அக்கறை கொண்டதுமில்லை. இவருடைய தொகுதியான வேலூர் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். இதுபற்றியும் கூட இவர் ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. 
இவருக்கோ பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பது, நிலத்தரகர் வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது, மணல் கொள்ளையில் பங்கு வாங்குவது என மக்கள் விரோத பணிகளில் ஈடுபடுவதே இவரது வாடிக்கையாகும். மேலும் இவருடைய மாவட்டம் வழியாகத்தான் பாலாறு தமிழ்நாட்டிற்குள் வருகிறது. இவரது மாவட்டம் பாலாற்றினால் அதிகம் பயன்படக்கூடியது. இப்போது அது வறண்டு கிடப்பதால் மக்கள் விவசாயம் மற்றும் குடிநீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இவரோ, இங்கே படுத்துக்கொண்டு அங்கே தீவிரவாதம், இங்கே தீவிரவாதம், அவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று, ஏதோ இவர்தான் நாட்டைக் காப்பாற்ற புறப்பட்டவர் போல அறிக்கைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஒருபுறம் மக்களை கொன்றுகுவித்து பயங்கரவாத அரசாக இருக்கிறது. இவரோ இதனை மறைக்க, மற்ற அனைவரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். தமிழின விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் இவரை கண்டிப்பாக தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப நாங்கள் முடிவெடுத்துள்ளோம். 
மேலும் தமிழர்களுக்கு எதிரான உலகம் முழுவதும் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது எங்கள் கடமை என்ற அடிப்படையில் இந்த பணியை மேற்கொண்டுள்ளோம். 
வேலூரில் காங்கிரஸ் கட்சியினை எதிர்க்கும் அதேவேளையில், மற்ற எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நாங்கள் வாக்கு சேகரிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சர்வதேச தமிழர் கழகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, தமிழ் தேச மாணவர் இயக்கம், சேவ் தமிழ் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கூட்டு முன்னணியின் மூலம் செயல்படுகிறோம். மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்ற பல தோழமை இயக்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை புறக்கணிக்க தமிழ் உணர்வாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து பணியாற்ற விரும்பினால் வரவேற்கிறோம். அனைவரையும் இணைந்து பணியாற்ற பொது அழைப்பு விடுக்கிறோம்.
 இதேபோன்று காங்கிரசிற்கான 63 தொகுதிகளிலும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கூட்டு இயக்கங்கள் புறக்கணிப்பு பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கும் எங்கள் எதிர்ப்பு முன்னணியின் சார்பாக ஒத்துழைப்பை நல்குவோம்.

தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம். 
காங்கிரசை தோற்கடிப்போம்.
மக்கள் நல்வாழ்விற்காக தொடர்ந்து போராடுவோம்.

நன்றி,

காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி 
 சர்வதேச தமிழர் கழகம்,
தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை,
சேவ் தமிழ் இயக்கம்,
தமிழ்தேச மாணவர் இயக்கம்.
தொடர்புக்கு, 94442 04740, 9940963131

No comments:

Post a Comment