Pages

Showing posts with label பேராய எதிரியை ( காங்கிரசை) அறிதல். Show all posts
Showing posts with label பேராய எதிரியை ( காங்கிரசை) அறிதல். Show all posts

Monday, 11 April 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -6



இந்திய விடுதலைக்குப் பாடிய கவிஞர்களைப் பற்றிய ஆவணப் படத்தை நடுவண் அரசின் செய்தி விளம்பரத்துறை வெளியிட்டது.  சிற்றரசுகளைப் பாடிய இரவீந்திரநாத தாகூரும், இயற்கையைப் பாடிய சரோசினி தேவியும் இடம் பெற்றிருந்தனர்; தமிழகத்துப் பாரதியாரோ, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையோ, நாமக்கல் கவிஞரோ இடம் பெறவில்லை.

Sunday, 10 April 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -5


ஆங்கில அரசை எதிர்த்து தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் நிதி உதவிகளையும் பெற்று வ.உ.சிதம்பரனார் இரண்டு கப்பல்களை வாங்கி ஓட்டினார். அவர் சிறைப்பட்டபோதுகப்பல் நிறுவனத்தை முடக்கினர்தொழிலாளிகளுக்குத் தம் மனைவியின் தாலியையும் விற்று உணவளித்திடச் செய்தார். சிறையிலிருந்து நோய்நொடியுடன் வெளியில் வந்து வறுமையில் வாடியபோது, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தந்த நிதியைக் கொடுக்க மறந்துவிட்டனர் பேராயக்கட்சியினர்சிறைலிருந்தபோது அவர் வாங்கிய கப்பல்களை எந்த ஆங்கிலகப்பல் நிறுவனத்தை எதிர்த்துக் கப்பல் இயக்கினாரோ அந்த ஆங்கில நிறுவனத்திடமே விற்றார்கள்!

Monday, 4 April 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் - 4



           விபின்சந்திர பாலரின் சிறையிலிருந்து விடுதலையான நாளை (10-03-1908)இந்திய விடுதலை நாளாகக் கொண்டாடினார்கள். அன்று ஆங்கில அரசின் தடையை மீறி அவ்விழாக் கூட்டத்தை நடத்தியதால் சிறைப்பட்டுச் சிறையில் கொடுமைப்பட்டுப், பின் நோயுடன் வெளி வந்த வ.உ.சி. அவர்களை வரவேற்கப் பேராய (காங்கிரசு)க் கட்சியினர் யாரும் வரவில்லை.

பேராயக் கட்சியை ( காங்கிரசை) அறிதல்-3


காங்கிரசுக் கட்சியின் கொள்கைகளைக் கைவிட்டு இந்துத்துவத்திற்கு மாறிய திலகரைக் காங்கிரசார்தம் கட்சி அரசியல் ஆதாயத்துக்காகப் பாராட்டி அவர் பெயரில் இந்தியா முழுதும் திடல்களும் மன்றங்களும்
ஏற்படுத்தினார்கள்; வ.உ.சி, பாரதியார் பெயர்க்ளைத் தமிழ் நாட்டோடு சுருக்கிவிட்டனர்.

Thursday, 31 March 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -2


பாரதிதாசன் இறந்த அன்றைக்குப் புதுச்சேரியில் அனைத்துக்கட்சிகளும் தம் கட்சிக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டன. பாரதிதாசனைக் கடுமையாகத் தாக்கி எழுதிய பொதுவுடைமைக் கட்சியின் கொடி கூட அரைக்கம்பத்தில் பறந்தது! ஒரே ஒருகட்சிக்கொடி இறங்காதது - பேராய (காங்கிரசு)க் கட்சியின் கொடிதான்!

பேராய எதிரியை ( காங்கிரசை) அறிதல் -1



இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் தம்மை காவலர்களாக எண்ணுகின்ற பேராயக் கட்சியினர் தம்மைத் தமிழின் எதிரிகளாய் ஆக்கிக்கொண்டுவிட்டனர்.
சைக்கில் என்பதை மிதிவண்டி என்று சொல்லாவிட்டால், அது ஓடாதா?
காஃபி என்பதைத் தமிழில் சொல்லாவிட்டால் குடிக்க மாட்டீர்களா?”
என்று கிண்டல் பேசினார் ஈ.வே.கி.ச. இள்ங்கோவன் என்னும் பேராயக்கட்சித்தலைவர்.