Pages

Thursday 3 March 2011

சொந்த மாவட்டமான திருவாரூரில் கருணாநிதி போட்டி?

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தான் வழக்கமாக போட்டியிடும் சேப்பாக்கத்தை விட்டு சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடக்கூடும் என்று திமு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசியல் தலைவர்களிலேயே பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஒரே தலைவர் என்ற பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட ஒரே தலைவரும் இவர்தான். சமீப காலமாக அவர் சென்னை தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். முன்பு துறைமுகத்தில் போட்டியிட்டார். கடந்த சில தேர்தல்களாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

தற்போது 2ஜி ஊழல் விவகாரம் பட்டி தொட்டியெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கருணாநிதி நகரத்தை விட கிராமப்புறத்தில் போட்டியிடுவது தான் சிறந்தது என்றும், அப்படிப் பார்த்தால் திருவாரூர் உகந்த இடமாக இருக்கும் என்றும் கட்சியினர் தலைவரிடம் நேற்று வலியுறுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி கடந்த 1957-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் இருந்து தான் சட்டசபைக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961-ம் ஆண்டு திமுக பொருளாளராக பொறுப்பேற்றார். 1962-ம் ஆண்டில் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவரானார்.

கருணாநிதி திருவாரூரில் போட்டியிட முடிவு செய்தால் 1962-ம் ஆண்டிற்கு பிறகு நகரத்தை விட்டு கிராமத்தில் போட்டியிடுவது இது தான் முதல் தடவையாகக இருக்கும். மேலும் திருவாரூரில் திமுகவினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவண்ணன் தெரிவித்தார்.

கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளை, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment