திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.
தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் புதன்கிழமை இரவு அண்ணா அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பெஸ்ட் ராமசாமி பேசியது:
திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் 7 தொகுதிகளில் போட்டியிடுவதென உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த 7 தொகுதிகளிலும் நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 60 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம். தொகுதிகள் தவிர கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார் என்றார் ராமசாமி.
மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு இடம்: ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடும்.
இதனையும் சேர்த்து திமுக கூட்டணியில் இதுவரை மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment