Pages

Sunday, 6 March 2011

காங்கிரஸýக்கு விடுதலை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியிருப்பதன் மூலம் தமிழக காங்கிரஸýக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்திருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
 இது குறித்து தினமணி நிருபரிடம் சனிக்கிழமை அவர் கூறியது: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது. இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நல்ல செய்தியாகும். இதன் மூலம் தமிழக காங்கிரஸýக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்துள்ளது.
 தனித்து போட்டியிடுவதா, அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார் இளங்
 கோவன். 

No comments:

Post a Comment