Pages

Saturday, 26 March 2011

த‌ங்கபாலு மனை‌வி‌க்கு எ‌‌திராக ம‌கிளா கா‌ங்‌கிர‌ஸ் போ‌ட்டி

கா‌ங்‌‌கிர‌‌‌ஸ் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ம‌யிலா‌ப்பூ‌ர் தொகு‌தி வே‌ட்பாள‌ர் ஜெய‌ந்‌தி த‌ங்கபாலுவு‌க்கு போ‌ட்டியாக த‌ெ‌ன் செ‌ன்னை மாவ‌ட்ட ம‌கிளா கா‌ங்‌கிர‌ஸ் செயல‌ர் ‌‌சிவகா‌மி வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

ம‌யிலா‌ப்பூ‌ர் தொகு‌தி கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி வே‌ட்பாள‌ராக க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌‌நில‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு மனை‌வி ஜெய‌ந்‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து ம‌‌கிளா கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌‌சி‌யின‌ர் கட‌ந்த 2 நா‌ட்களாக போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வ‌ந்தன‌ர்.

நே‌ற்று த‌ங்கபாலு ‌‌‌வீ‌ட்டை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ம‌கிளா கா‌ங்‌கிரசா‌ர் ‌தீ‌க்கு‌ளி‌க்க முய‌ன்று பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தின‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்று தெ‌ன் செ‌ன்னை மாவ‌ட்ட ம‌கிளா கா‌‌ங்‌கிர‌‌ஸ் செயல‌ர் சிவகா‌மி ம‌யிலா‌ப்பூ‌ர் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிட வே‌ட்பு மனு தா‌‌க்க‌ல் செ‌ய்தா‌‌ர்.

இ‌ந்த வே‌ட்பு மனு தா‌க்க‌லி‌‌ன்போது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் மக‌ளிர‌ணி, இளைஞர‌ணி, சேவாதள‌ம், எ‌ஸ்.‌சி, எ‌ஸ்.டி ‌நி‌‌ர்வா‌கி‌க‌ள் ஏராளமானோ‌‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

வே‌ட்பு மனு‌ தா‌க்கலு‌க்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌சிவகா‌மி, 25 வருட‌ங்களாக கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி உறு‌ப்‌பினராக இரு‌ந்து வரு‌கிறே‌ன் எ‌ன்றா‌ர்.

மா‌நில‌த் தலைவ‌ர் த‌ங்கபாலு தனது செ‌‌ல்வா‌க்கை பய‌‌ன்ப‌டு‌த்‌தி தனது மனை‌வி‌க்கு வா‌ய்‌ப்பு பெ‌ற்று‌ள்ளா‌ர் எ‌ன்று‌ கூ‌றிய ‌‌சிவகா‌மி, த‌ங்கபாலு பல தொகு‌திக‌ளி‌ல் பண‌ம் பெ‌ற்று‌க் கொ‌ண்டு தொகு‌தி‌க்கு அ‌றிமுக‌ம் இ‌ல்லாதவ‌ர்களை வே‌ட்பாள‌ர்களாக ‌நிறு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

எனது செ‌ல்வா‌க்கை பய‌ன்படு‌த்‌தி ம‌யிலா‌ப்பூ‌ர் தொகு‌தி‌‌யி‌ல் த‌ங்கபாலு மனை‌வி ஜெய‌ந்‌‌தியை ‌நி‌ச்சய‌ம் தோ‌ற்கடி‌ப்பே‌ன் எ‌ன்று‌ ‌சிவகா‌மி கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment