கூட்டணிக் கட்சிகளுடன் எந்தெந்தத் தொகுதிகள் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: குறைந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை முடிவு செய்கின்ற நேரத்தில், ஒருசில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட நேரிடலாம்.
தாங்கள் நிற்பதற்கு உறுதி செய்த தொகுதி கிடைக்காமல் போய் விட்டதே என்று எண்ணிடாமல், தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அந்தத் தொகுதியில் மட்டுமல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது எனக் கருத வேண்டும்.
போட்டியிடும் தொகுதிகள்: கூட்டணிக் கட்சிகளோடு எந்தெந்த தொகுதிகள் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன என்பது அடுத்து வரும் நாள்களில் பேசி முடிவெடுத்து அவைகள் அனைத்தும் அறிவிக்கப்பட உள்ளன. அவற்றில் திமுக போட்டியிடவுள்ள தொகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டு, அநதத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்தவர்களை சென்னைக்கு அழைத்து, அவர்களை நேர்காணல் செய்யும் பணியும் இரண்டொரு நாள்களில் தொடங்கப்படவுள்ளன.
திமுக போட்டியிடவுள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன் அந்தத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் தேர்தல் சின்னத்தை வரைந்திடும் பணியில் ஈடுபட வேண்டும்.
அப்படி எழுதும்போது பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்யக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment