கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல் செய்யாததால் காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே மோதல் வெடித்தது.
திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு வேட்பாளராக ஹஸீனா சையத் என்பவர் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் நேற்று முன் தினம் முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 3 பேரை மாற்றம் செய்து ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், ஹஸீனா சையத்துக்கு பதிலாக கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்பூல் ஜான் என்பவர் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று மாலை 3 மணிவரை மக்பூல் ஜான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் அவர் போட்டியிடுவது இயலாததாகிவிட்டது. இருப்பினும் ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹஸீனா சையத் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும் சுயேச்சையாக போட்டியிட காங்கிரஸார் 6 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். எனவே, அவர்கள் 6 பேருக்குமோ அல்லது ஹஸீனா சையத்துக்கோ காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment