திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சின்னத்திலேயே இக்கட்சி இந்தத் தொகுதியில் போட்டியிடும்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதற்கான உடன்பாட்டு ஏற்பட்டது. இதையடுத்து திமுக சின்னத்தில் ஒரு தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுகவில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்டையும் சேர்த்து இதுவரை 45 சீட்களை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டது. மீதமுள்ள சீட்களை திமுக, காங்கிரஸ் ஆகியவை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்ற சிறு கட்சிகளுக்கும் சீட் தர வேண்டியதுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment