Pages

Sunday 6 March 2011

அதிமுகவுக்கு ஆதரவா? ஓரிரு நாளில் முடிவு: வேளாளர் கவுண்டர்கள் பேரவை

சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

 இது வரையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை ஆதரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 சட்டப் பேரவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அதன் தலைவர் மணி கவுண்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
 கள் இறக்க அனுமதி, சாயக் கழிவு நீரை கடலில் விடுதல், கவுண்டர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக தலைமையிலான அரசு, எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.
 90 சதவீத தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்த நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. கொள்கைகளை விடுத்து திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
 இப்போது சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து உயர்மட்டக் குழு ஓரிரு தினங்களில் முடிவு செய்யும். கவுண்டர்களின் நலனைப் புறக்கணித்து திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்ட கொ.மு.க.வை எதிர்த்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்.
 கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையில் சுமார் 1.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
 கள் இறக்கும் தொழிலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது என்றார்.
 

1 comment:

Post a Comment