Pages

Friday 4 March 2011

தேர்தலில் பண விநியோகத்தை தடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 தேர்தலில் பணப் புழக்கத்தைத் தடுக்க வேண்டும், அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக சார்பில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்கா ஆகியோர் வலியுறுத்தினர்.
 கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். அந்தத் தேதியில் தேர்தல் நடத்துவதால் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படும். ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தேர்தலை தள்ளி வைக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறினாலும், இந்தக் கோரிக்கை குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினோம். தேர்தலைப் பொறுத்தவரை வாக்குகளுக்கு பணம் கொடுப்பது, இலவசங்களை அளிப்பது வாடிக்கையாகி விட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். 30 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அளிக்கவில்லை. அதை உடனடியாகக் கொடுக்க வேண்டும். பணம், பொருள் விநியோகித்தை தடுக்க வேண்டும் என்றார்.
 இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தின.
 

No comments:

Post a Comment