Pages

Wednesday 2 March 2011

ஓட்டு போடும் இயந்திரத்தில் "49 ஓ' வசதி தேவை: உயர் நீதிமன்றத்தில் வழக்கு


யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்கிற 49 ஓ பிரிவை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: தேர்தலில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லாத வாக்காளர்கள் 49 ஓ என்கிற பிரிவைச் செயல்படுத்தலாம். ஆனால், இதைச் செயல்படுத்தும் நடைமுறை நீண்டதாக உள்ளது.
மேலும், இந்த முறை ரகசியமாக ஓட்டுப் போடும் முறைக்கு எதிராகவும், சாதாரண மக்களுக்குப் புரியாத வகையிலும் உள்ளது. எனவே, 49 ஓ பிரிவை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 25.01.2011 அன்று மனு செய்யப்பட்டது. எனினும், எந்த பலனும் இல்லை. எனவே, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுóம என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment