திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் போட்டியிட விரும்பும் விருப்பத் தொகுதிப் பட்டியலை திமுகவிடம் திருமாவளவன் கொடுத்தார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. இதற்கான உடன்பாடு சமீபத்தில் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழு வந்தது. அவர்கள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவைச் சந்தித்தனர்.
அப்போது தாங்கள் போட்டியிட விரும்பும் விருப்பத் தொகுதிப் பட்டியலை வழங்கினார் திருமாவளவன். பின்னர் இதுகுறித்து இரு கட்சிக் குழுக்களும் விவாதித்தன.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 சீட்களுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. நாங்கள் 7 தனித் தொகுதிகள், 3 பொதுத் தொகுதிகள் தருமாறு கேட்டுள்ளோம். முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது.
இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவடையும். இன்று இரவே அவை முடிவாகும் என்று நம்புகிறோம் என்றார் திருமாவளவன்

No comments:
Post a Comment