Pages

Thursday 3 March 2011

சேலத்தில் தேர்தல் விதிமுறை மீறல்: வாகனங்கள் மூலம் கலர் டிவிக்கள் விநியோகம்


சேலம் மாநகரில் தேர்தல் விதிகளை மீறி, இலவச கலர் டிவிக்கள் வாகனங்கள் மூலம் பயனாளிகளுக்கு புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.
 தமிழக சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கூடாது.
÷ஆனால், சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
÷இது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் விளக்கக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆட்சியர், தேர்தல் விதிகளை மீறி அரசின் நலத்திட்டங்களை வழங்கக் கூடாது என்று எச்சரித்தார்.
÷இந் நிலையில் சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 24, 25-வது கோட்டங்களில் (சேலம் மேற்கு தொகுதி) பள்ளப்பட்டி, அங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை நண்பகலில் பொதுமக்களுக்கு இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
÷இதே போல் கந்தம்பட்டி பைபாஸ், தாதகாப்பட்டி பகுதிகளிலும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன.
÷இது குறித்து சேலம் மேற்கு தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் சுரேஷிடம் கேட்டபோது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை  கலர் டிவிக்கள் வழங்கப்பட்டதாக ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
÷சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலர் எம்.கே. செல்வராஜ் கூறும்போது, அம்மாப்பேட்டை, பள்ளப்பட்டி பகுதிகளில் இரவோடு இரவாக டோக்கன்கள் வழங்கப்பட்டு புதன்கிழமை வாகனங்களில் எடுத்துச் சென்று வீடு வீடாக டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. சாமிநாதபுரம், அரிசிப்பாளையம் பகுதிகளில் சில வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட கலர் டிவிக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.
÷தேர்தல் அறிவிப்புக்கு மறுநாளே தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment