Pages

Tuesday 8 March 2011

தேர்தலைப் புறக்கணிப்போம்: திருப்பூரில் சாயத் தொழிலாளர்கள், பெண்கள் போர்க்கொடி


சாயக் கழிவு, சுத்திகரிப்பு ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய சாலைகளில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பூர் நகரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சாய ஆலைகள் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தடையால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தாங்கள் வேலையிழப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களைக் காக்க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகவும் கூறி இன்று பெண்கள் பெருமளவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நகரின் முக்கியச் சாலைகள் சந்திக்கும் இடங்களில் சாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் கூடி, சாயக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், இன்னும் ஒரு மாத காலம் நிலைமை இப்படியே நீடித்தால் தாங்கள் வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்றும் கூறினர்.
மேலும், இந்த விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்கப் போவதில்லை என்றும், தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்கப் போவதாகவும் கூறினர்.
சர்வதேச மகளிர் தினம் என்று கொண்டாடப்படும் நிலையில் இன்று பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈட்பட்டுள்ளது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment