Pages

Wednesday, 16 March 2011

தர்மபுரி மாவட்டம் 5 தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்

காங்கிரஸ் தலைமை செயலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று தங்கபாலுவுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதற்கு தர்மபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இராஜவீரப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் 16 வருடங்களாக தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரசு போட்டியிடவே இல்லை, இந்த முறையும் தங்கபாலு திட்டமிட்டு தர்மபுரி மாவட்டத்தை புரக்கனித்திருக்கிறார் எனவும் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஒதுக்கப்படவில்லையெனில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் இளைஞர் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு காங்கிரசார் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment