தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்?
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே
தேர்தல் வந்திருச்சு, திருவிழா தொடங்கிடுச்சு. நம்மல அஞ்சு வருசமா மதிக்காத பல வண்ணக் கரைவேட்டி, கட்சிக்காரன்கள் எல்லாம், பையில பணத்தோட, வாயி நெறைய சிரிப்போட, கும்பிட்ட கையோட, வீட்டு வீட்டுக்கு வரப்போறான். போடுங்கம்மா ஓட்டு, எங்க சின்னத்தப் பாத்துன்னு கேட்கப் போறான்.
நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னக் காரணத்துக்காக ஓட்டுப் போடப் போறீங்க?
நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற பிரதிநிதிகளை வைத்துத்தான் நம்மை ஆளுகின்றன கட்சிகள். நாமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்திப் பார்க்கிறோம். என்னக் காரணத்திற்காக இவர்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று யோசித்துப் போடுகிறோமா? ஜாதி, பணம், இலவசம் என நம்மை இந்த கட்சிகள் விலைக்கு வாங்க பார்க்கிறார்களே, நாம் இந்த நாட்டு பிரஜைகள் இல்லையா? நாம் நம் நாட்டு நலனை பற்றியோ அவர்கள் சூரையாடும் நம் தேச நலனை பற்றியோ நாம் எண்ணிப் பார்க்கிறோமா?
நம்மிடம் ஓட்டுகேட்க வரும் டெல்லிக்கு சலாம் போடும் காங்கிரஸ் காரனோ, நம் தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ என்றாவது வாய்த்திறந்து பேசி இருக்கிறானா? நம்மீது அக்கறை கொண்டிருக்கிறானா? அவனுக்கா நாம் வாக்களிக்கப் போகிறோம்? நம் எதிரி யார் என்று தெரியாமல் நம்மை விற்றுக்கொள்ளப் போகிறோமா?
1. ஜப்பானைப் போல, தமிழகத்தில் அணு உலையைத் திறந்து தமிழர்களைக் கொல்ல நினைப்பவன் யார் – காங்கிரஸ்காரன்.
2. கச்சைத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து நம் தமிழ்மண்ணை அன்னியனுக்கு பறிகொடுத்த்து யார் - காங்கிரஸ்காரன்.
3. இலங்கைக்காரன் தமிழநாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது இலங்கைக்கு ஆதரவாக பேசுபவன் யார் – காங்கிரஸ்காரன்
4. ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை கொல்வதற்கு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்ததோடு, விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும், போரை நிறுத்தக்கூடாது என்று சொல்லிய தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் விரோத கட்சி எது? – காங்கிரஸ்காரன்.
5. உடல் நலம் குன்றிய தாயார் பார்வதியம்மாவை மருத்துவத்திற்கு அனுமதிக்காமல் கொன்றது யார் - காங்கிரஸ்காரன்
6. தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்து, அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் 500 பேரைக் கொன்ற கட்சி எது – காங்கிரஸ்
7. குலக்கல்வி கொண்டுவந்து நாட்டைப் பார்ப்பானுக்கு சாதி அடிமைத் தொழிலைப் பார்க்கச் சொன்ன ராஜாஜி எந்த கட்சிக்காரன் - காங்கிரஸ்
8. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கோரி 53 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தாரே சங்கரலிங்கனார் அவரைக் கொன்ற கட்சி எது- காங்கிரஸ்
9. மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்து, தேசிய இன வளர்ச்சியை நசுக்க சதி செய்த கட்சி எது - காங்கிரஸ்
10. காவிரி, முல்லை.பெரியாறு, பாலாறு, தமிழக நீர்வளப் பிரச்சனையை தீர்க்காமல் புறக்கணித்து, நம்மை மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தும் கட்சி எது – காங்கிரஸ்
11. நெய்வேலி, நரிமணம் என நமது தமிழ்நாட்டுக் கனிவளங்கள் கொள்ளைபோக அதைப் பற்றி தமிழ்நாட்டிலே வாயே திறவாமல் டெல்லிக்கு சலாம் போடுகிறவன் எவன்- காங்கிரஸ்காரன்
12. பி.ஜே.பி இந்துவெறியர்கள் பாபர் மசூதியை இடிக்க அனுமதித்த கள்ளக்கூட்டுக்காரன் நரசிம்மராவ் எந்த கட்சி - காங்கிரஸ்
13. தமிழ்நாட்டு வளங்களை பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க டங்கல் கொள்ளை ஒப்பந்த்த்தில் கையெழுத்திட்ட கூட்டுக் கொள்ளைக் காரன் யார் - காங்கிரஸ்
14. அணு ஒப்பந்தம் போட்டு நாட்டை அமெரிக்காவுக்கு அடகுவைக்கத் துடிக்கும் கட்சி எது - காங்கிரஸ்
15. பன்னாட்டு முதலைகளுக்காக கனிவளங்களை சூரையாட பழங்குடி மக்களை கொல்ல சொல்லும் ப.சிதம்பரம் எந்த கட்சி – காங்கிரஸ்
16. ஒரே நாளில் 10,000 சீக்கியர்களை டெல்லியிலும், சில வருடங்களில் 70,000 காசுமீர் முஸ்லீம்களையும் கொன்ற கட்சி எது - காங்கிரஸ்
இப்படி தமிழர்களாகிய நமக்கும், பிற இனங்களுக்கும் காங்கிரஸ் இழைத்த கொடுமை பட்டியல் போட்டால் பக்கங்கள் தீராது. சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நீங்கள் கேட்கலாம். பிற கட்சிகள் யோக்கியமா என்று?. இல்லை இவர்களும் கூட்டுக் களவாணிகள்தான். ஆனால் இந்த காங்கிரஸ் கொடுங்கோலர்கள் நமக்கு அரச வம்சங்களைப்போல ஐம்பது ஆண்டுகாலமாக பெரும் கொடுமைகளை இழைத்து வருகிறார்கள். இதன் உச்சமாக 2009 மே யில் ஈழத்தமிழர்கள் 1லட்சம் பேர் கொல்லப்படும் போது, நாமெல்லாம் பதறி துடித்தோம். ஆனால் இவர்கள் புலிகளைக் காரணம்காட்டி அப்படுகொலையை எதிர்பார்த்து மகிழ்வோடு வர வேற்றார்கள், இந்தப் பழி இவர்களைத் தீராது. இன்று நாம் இவர்களை விட்டோமானால் நாளை கேள்விக் கேட்பாரற்று யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள். அப்பொழுதும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருப்போம். மனித குலம் நம்மை மன்னிக்காது. ஆதலால் தமிழர்களாகிய நாம் இந்தக் கொலைகார காங்கிரஸை நம் மண்ணிலிருந்து விரட்டி னோமானால், வரலாற்றில் அது பதிவுபெறும். படுகொலையாளர்களுக்கும், கொடுங்கோலர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இல்லை யென்றால் நாளை இனப்படுகொலையாளர்கள் மட்டுமே அரசியல் வாதிகளாக பவனிவருவார்கள். ஆதலால் வரும் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்போம்.
அ.தி.மு.க, தி.மு.க., உள்ளிட்ட முக்கியக் கட்சிகளே
உங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஈழப் போராட் டத்தின்போது காங்கிரஸோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் நாடகங்களையும், துரோகங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டு கிறோமென்றால், காங்கிரஸ் நம் இன எதிரி, நீங்களோ, மத்தியில் அதிகாரம் இல்லாமல், காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாவிட் டாலும் அவர்கள் காலடியில் கிடக்கிறீர்கள். யார் அவனோடு கூட்டு என நாய்சண்டை போடுகிறீர்கள், 356 வது சட்டமும், சி.பி.ஐ யும் மிரட்டுகிறது. அமைச்சரவைப் பங்கு என உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
எச்சில் துண்டுக்காக தமிழர்களை காங்கிரசிடம் அடகு வைக்கிறீர்கள்.
மையத்தில் அரசதிகார இறையாண்மை இல்லாத நீங்கள், எப்பொழுதும இந்தியக் கட்சிகளின் அடிமைகள்தான். இதற்காக ஒருநாள் தமிழக மக்கள் உங்களையும் தண்டிப்பார்கள்.
இப்பொழுதாவது உணருங்கள். காங்கிரஸை தோற்கடிக்க வாருங்கள்.
பெரியார், அம்பேத்கார் கனவான காங்கிரஸை ஒழிக்க வாருங்கள்.
தமிழக மக்களே !
காங்கிரஸை தோற்கடிப்போம்!
தமிழின விரோதிகளுக்குப் பாடம் புகட்டுவோம்!!
நந்தன்.....
காங்கிரசு கட்சியை விரட்டியடிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் வெளியிட்ட துண்டரிக்கை
No comments:
Post a Comment