வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அக்கட்சியின் சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என கட்சியின் நிறுவனர்-தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார். திண்டுக்கல்லில், ஞாயிற்றுக்கிழமை புதிய நீதிக் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் தேர்தலில் திமுக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி வேட்பாளர்கள் அக்கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவர். பிப்ரவரி 27-ம் தேதி வேலூரில் நடைபெற உள்ள கட்சியின் 3-வது மாநில மாநாட்டில், திமுக தலைவர் கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது வழங்கப்படும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் விவகாரம் என்பதால், இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில், திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்றார் அவர்.

No comments:
Post a Comment