Pages

Monday, 21 February 2011

தொகுதி பங்கீடு: அதிமுக-மதிமுக பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ம.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது.

அ.தி.மு.க குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் ம.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு தலைமை கழக செய்தி தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன்,

அ.தி.மு.க. குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 2 வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது எங்களுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறோம். எங்களுடைய ஓட்டு மொத்த குறிக்கோள் தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வியூகம் அமைத்துள்ளோம் ம.தி.மு.க.வுக்கு எத்தனை இடம் என்பது பற்றி இரு தலைவர்களும் முடிவு செய்வார்கள். இன்னும் சில கட்சிகள் இந்த அணிக்கு வர உள்ளனர் என்றார்

No comments:

Post a Comment