Pages

Tuesday, 22 February 2011

தொகுதி ஒதுக்கீடு ஓரிரு நாளில் இறுதியாகும்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர்

பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் துடியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற, "கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் கோரிக்கை மாநாட்டில்' பங்கேற்க வந்த அவர், தினமணி-க்கு அளித்த பேட்டி: அதிமுக-மார்க்சிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை நடந்த இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக உறவு நீடிப்பதால், எவ்வித பிரச்னையும் இன்றி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றமும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அலையை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் பாதிப்புகளை மக்கள் உணர்ந்துவிட்டனர். இது வரும் பேரவைத் தேர்தலில் பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தப்போவது உறுதி. தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனில், திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். அதிமுக அணியில் உள்ள கட்சிகள் அதற்காகப் போராடும் என்றார்

No comments:

Post a Comment