Pages

Monday, 21 February 2011

அ.தி.மு.க. அணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

அ.தி.மு.க. அணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அறிவித்தார்.
 மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சனிக்கிழமை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டை இறுதி செய்ய உள்ளதாக ஜவாஹிருல்லாஹ் அறிவித்திருந்தார்.
 இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை எம்.எச். ஜவாஹிருல்லாஹ் சந்தித்துப் பேசினார்.
 அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உடன் இருந்தனர்.
 இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எம்.எச். ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களிடம் கூறியது: அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
 வரும் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் மனிதநேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடும்.
 இந்திய தேர்தல் ஆணையத்தில் எங்கள் கட்சி முறைப்படி பதிவு செய்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனி சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்றார் ஜவாஹிருல்லாஹ்.

 அதிமுக அணியில் இதுவரை  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள கட்சிகள்
 மனித நேய மக்கள் கட்சி - 03
 புதிய தமிழகம் - 02
 இந்திய குடியரசுக் கட்சி - 01
 மூவேந்தர் முன்னணிக் கழகம் - 01

No comments:

Post a Comment