அதிமுக கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி "தினமணி' நிருபரிடம் கூறியது: அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து எங்களது ஆதங்கத்தையும், கவலையையும் அதிமுக தலைமைக்கு தெரிவித்து விட்டோம். புதிய தமிழகம் கட்சிக்கு தலித்கள், சிறுபான்மையினரிடத்தில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதிமுக அணிக்கு எங்கள் கட்சி மூன்றாவது கையாக உள்ளது. எனவே, தகுந்த தொகுதிகளை ஒதுக்கினால்தான் கட்சியினருக்கு உற்சாகம் ஏற்படும். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். அரசியலில் முடிந்து விட்ட விஷயம் என்று எதனையும் கூற முடியாது. கூடுதல் தொகுதிகள் கொடுத்து அதிமுக தலைமை எங்களை அரவணைக்கும் என்று நம்புகிறேன் என்றார் கிருஷ்ணசாமி.
No comments:
Post a Comment