Pages

Monday, 21 February 2011

தி.மு.க.வின் "பார்முலா'

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் நடத்திய பேச்சிலிருந்து, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை இந்த முறையும் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. ஆர்வமாக உள்ளது தெரியவந்துள்ளது.

 கடந்த 2006 பொதுத்தேர்தலில் தி.மு.க. 134 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறை அதே எண்ணிக்கையிலோ அல்லது சில தொகுதிகளில் கூடுதலாகவோ போட்டியிடுவதற்கு தி.மு.க. ஆர்வமாக இருக்கிறது. பா.ம.க.வுடன் ஏற்பட்ட தேர்தல் உடன்பாட்டை காங்கிரஸ் கட்சியுடனான பேச்சின் போது தி.மு.க. தலைவர்கள் முக்கியத்துவம் அளித்து பேசியுள்ளனர்.
 இந்த உடன்பாட்டின் மூலம் 60 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் தி.மு.க. செய்துவிட்டது என்று காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment