அதிமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளாவது எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், நடிகருமான மு. கார்த்திக் வலியுறுத்தினார்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டக் கோரியும், 2ஜி ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ ஊழலைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில், திருப்பரங்குன்றம் கீழக்குயில்குடியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற நடிகர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுகவுடன் கூட்டணி குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது, பாமகவும் வரவுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், அக்கட்சி இப்போது திமுக பக்கம் சென்றுவிட்டது. ஆகவே, தென்மாவட்டங்களில் குறைந்தது 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என எங்கள் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
எங்களுக்கு நியாயமான தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கார்த்திக்.

No comments:
Post a Comment